குர்ஆன் 12:42 — ஜோஸஃப்
காப்பாற்றப்பட இருந்தவரிடம் அவர் பின்னர், “உனது எஜமானரிடம் என்னை நினைவு கூர்வீராக”* என்று கூறினார். இவ்விதம் சாத்தான் அவரை அவருடைய இரட்சகரை மறக்கும்படிச் செய்தான், மேலும் , அதன் விளைவாக, இன்னும் சில வருடங்கள் அவர் சிறையில் தொடர்ந்து நீடித்திருந்தார்.
[12:41] “என் சிறைத் தோழர்களே, உங்களில் ஒருவன் தன் எஜமானுக்கு மது பரிமாறுவான், அதே சமயம் மற்றொருவன் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவான்-அவன் தலையிலிருந்து பறவைகள் உண்ணும். இத்துடன் நீங்கள் விசாரித்தது பற்றிய விஷயம் முடிவடை கின்றது.”
[12:43] மன்னர், “ஏழு கொழுத்த பசுக்கள், ஏழு மெலிந்த பசுக்களால் ஆவலோடு விழுங்கப் படுவதையும், மேலும் பசுமையான ஏழு (கோதுமைக்) கதிர்களையும், மற்றவை காய்ந் திருப்பதாகவும் நான் கண்டேன். என் பிரதானிகளே, கனவுகளுக்கு விளக்கம் சொல் வது எப்படி என்பதை நீங்கள் அறிந்திருந்தால், என் கனவைப் பற்றி எனக்கு ஆலோசனை யளியுங்கள்” என்று கூறினார்.