குர்ஆன் 12:44 — ஜோஸஃப்
அவர்கள், “அர்த்தமற்ற கனவுகள். கனவு களுக்கு விளக்கம் என வரும் போது, நாங்கள் அறிவு பெற்றவர்கள் அல்ல” என்று கூறினார்கள்.
[12:43] மன்னர், “ஏழு கொழுத்த பசுக்கள், ஏழு மெலிந்த பசுக்களால் ஆவலோடு விழுங்கப் படுவதையும், மேலும் பசுமையான ஏழு (கோதுமைக்) கதிர்களையும், மற்றவை காய்ந் திருப்பதாகவும் நான் கண்டேன். என் பிரதானிகளே, கனவுகளுக்கு விளக்கம் சொல் வது எப்படி என்பதை நீங்கள் அறிந்திருந்தால், என் கனவைப் பற்றி எனக்கு ஆலோசனை யளியுங்கள்” என்று கூறினார்.
[12:45] (சிறையிலிருந்து) காப்பாற்றப்பட்ட ஒருவன், இப்போது இறுதியில் ஞாபகம் வந்தவனாக, “அதன் விளக்கத்தைக் கூற என்னால் இயலும், ஆகவே என்னை (ஜோஸஃபிடம்) அனுப்புங் கள்” என்று கூறினான்.