குர்ஆன் 12:45 — ஜோஸஃப்
(சிறையிலிருந்து) காப்பாற்றப்பட்ட ஒருவன், இப்போது இறுதியில் ஞாபகம் வந்தவனாக, “அதன் விளக்கத்தைக் கூற என்னால் இயலும், ஆகவே என்னை (ஜோஸஃபிடம்) அனுப்புங் கள்” என்று கூறினான்.
[12:44] அவர்கள், “அர்த்தமற்ற கனவுகள். கனவு களுக்கு விளக்கம் என வரும் போது, நாங்கள் அறிவு பெற்றவர்கள் அல்ல” என்று கூறினார்கள்.
[12:46] “என் நண்பர் ஜோஸஃபே, ஏழு கொழுத்த பசுக்கள், ஏழு மெலிந்த பசுக்களால் ஆவலோடு விழுங்கப்படுவதைப் பற்றியும், ஏழு பசுமையான கதிர்களையும் மற்றவை காய்ந்து போயிருப் பதைப் பற்றியும் எங்களுக்குத் தெரிவிப்பீராக. மக்களுக்குச் சில தகவல்களுடன் திரும்பிச் செல்ல நான் விரும்புகின்றேன்.”