குர்ஆன் 12:46 — ஜோஸஃப்
“என் நண்பர் ஜோஸஃபே, ஏழு கொழுத்த பசுக்கள், ஏழு மெலிந்த பசுக்களால் ஆவலோடு விழுங்கப்படுவதைப் பற்றியும், ஏழு பசுமையான கதிர்களையும் மற்றவை காய்ந்து போயிருப் பதைப் பற்றியும் எங்களுக்குத் தெரிவிப்பீராக. மக்களுக்குச் சில தகவல்களுடன் திரும்பிச் செல்ல நான் விரும்புகின்றேன்.”
[12:45] (சிறையிலிருந்து) காப்பாற்றப்பட்ட ஒருவன், இப்போது இறுதியில் ஞாபகம் வந்தவனாக, “அதன் விளக்கத்தைக் கூற என்னால் இயலும், ஆகவே என்னை (ஜோஸஃபிடம்) அனுப்புங் கள்” என்று கூறினான்.
[12:47] அவர் கூறினார், “அடுத்த ஏழு வருட காலம் நீங்கள் பயிரிடுபவற்றை, அறுவடைக் காலம் வரும்போது, நீங்கள் உண்ணுவதற்குரிய வற்றைத் தவிர, தானியங்களை அதன் கதிர்களிலேயே இருக்கும்படி விட்டு விடுங்கள்”.