குர்ஆன் 12:50 — ஜோஸஃப்
மன்னர், “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அவரிடம் தூதன் வந்தபோது, அவர், “உன் எஜமானரிடம் திரும்பிச் சென்று தங்கள் கரங்களை வெட்டிக் கொண்ட பெண்களை விசாரிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொள். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றி என் இரட்சகர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறினார்.
[12:49] “அதன் பின்னர், மக்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு வரும் ஒரு வருடம் வரும், மேலும் அவர்கள், மீண்டும் ஒருமுறை, பழரசம் பிழிவார்கள்.”
[12:51] (மன்னர்) (அப்பெண்களிடம்), “ஜோஸஃபை நீங்கள் வசீகரிக்க முயன்ற போது நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தது என்ன?” என்று கூறினார். அவர்கள், “கடவுள் காப்பாராக; அவர் எந்த தீமையான விஷயத் தையும் செய்ததாக நாங்கள் அறியவில்லை” என்று கூறினார்கள். ஆளுநரின் மனைவி கூறினாள், “ இப்போது சத்தியம் வென்று விட்டது. நான் தான் அவரை தவறான வழியில் செலுத்த முயன்றேன், மேலும் அவர் உண்மையான ஒருவராக இருந்தார்.