Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:52 — ஜோஸஃப்

“அவர் இல்லாத நேரத்தில் அவருக்கு நான் ஒரு போதும் துரோகமிழைக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொள்வார் என நான் நம்புகின்றேன், ஏனெனில் துரோகிகளின் சூழ்ச்சிகளுக்கு கடவுள் அருள்பாலிப்பதில்லை.

[12:51] (மன்னர்) (அப்பெண்களிடம்), “ஜோஸஃபை நீங்கள் வசீகரிக்க முயன்ற போது நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தது என்ன?” என்று கூறினார். அவர்கள், “கடவுள் காப்பாராக; அவர் எந்த தீமையான விஷயத் தையும் செய்ததாக நாங்கள் அறியவில்லை” என்று கூறினார்கள். ஆளுநரின் மனைவி கூறினாள், “ இப்போது சத்தியம் வென்று விட்டது. நான் தான் அவரை தவறான வழியில் செலுத்த முயன்றேன், மேலும் அவர் உண்மையான ஒருவராக இருந்தார்.

[12:53] “நான், என்னை குற்றமற்றவள் என்று உரிமை கோரவில்லை. என்னுடைய இரட்சகரிடமிருந்து கருணையை அடைந்தவர்களுக்கு தவிர, மன இச்சையானது தீய ஒழுக்கத்தை ஆதரிக்கும் ஒன்றாகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.”