Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:80 — ஜோஸஃப்

அவருடைய மனதை மாற்றி விடும் நம்பிக்கையை அவர்கள் இழந்தபோது, அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். அவர்களுடைய மூத்தவர், “ கடவுள் முன் முறைப்படியானதொரு சத்தியத்தை உங்கள் தந்தை உங்களிடமிருந்து பெற்றிருக்கின்றார் என்பதை நீங்கள் உணர வில்லையா? கடந்த காலத்தில் நீங்கள் ஜோஸஃபைத் தொலைத்தீர்கள். என் தந்தை எனக்கு அனுமதி தரும்வரை, அல்லது கடவுள் எனக்குத் தீர்ப்பளிக்கும் வரை இவ்விடத்தை விட்டு நான் வெளியேறமாட்டேன்; அவரே மிகச் சிறந்த நீதிபதி என்று கூறினார்.

[12:79] அவர், “எவரிடம் எங்கள் பொருட்களை நாங்கள் கண்டோமோ, அவரையன்றி மற்றொருவரை நாங்கள் பிடித்துவைத்துக் கொள்வதை விட்டுக் கடவுள் காப்பாராக. இல்லையென்றால், நாங்கள் நீதமற்றவர்களாகி விடுவோம்” என்று கூறினார்.

[12:81] “உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று அவரிடம் கூறுங்கள்.....” ‘எங்கள் தந்தையே, உமது மகன் ஒரு திருட்டைச் செய்துவிட்டான். நாங்கள் மிக உறுதியாக அறிவோம், ஏனெனில் இதனைத்தான் நாங்கள் கண்டோம். இது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றாக இருந்தது.