குர்ஆன் 12:79 — ஜோஸஃப்
அவர், “எவரிடம் எங்கள் பொருட்களை நாங்கள் கண்டோமோ, அவரையன்றி மற்றொருவரை நாங்கள் பிடித்துவைத்துக் கொள்வதை விட்டுக் கடவுள் காப்பாராக. இல்லையென்றால், நாங்கள் நீதமற்றவர்களாகி விடுவோம்” என்று கூறினார்.
[12:78] அவர்கள், “பெருந்தகையே, இவனுக்கு வயது முதிர்ந்ததொரு தந்தை இருக்கின்றார்; இவனுடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் பிடித்துக் கொள்வீரா? கனிவானவொரு மனிதராக உம்மை நாங்கள் காண்கின்றோம்” என்று கூறினார்கள்.
[12:80] அவருடைய மனதை மாற்றி விடும் நம்பிக்கையை அவர்கள் இழந்தபோது, அவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். அவர்களுடைய மூத்தவர், “ கடவுள் முன் முறைப்படியானதொரு சத்தியத்தை உங்கள் தந்தை உங்களிடமிருந்து பெற்றிருக்கின்றார் என்பதை நீங்கள் உணர வில்லையா? கடந்த காலத்தில் நீங்கள் ஜோஸஃபைத் தொலைத்தீர்கள். என் தந்தை எனக்கு அனுமதி தரும்வரை, அல்லது கடவுள் எனக்குத் தீர்ப்பளிக்கும் வரை இவ்விடத்தை விட்டு நான் வெளியேறமாட்டேன்; அவரே மிகச் சிறந்த நீதிபதி என்று கூறினார்.