குர்ஆன் 12:9 — ஜோஸஃப்
“உங்கள் தந்தையின் கவனத்தை நீங்கள் ஓரளவு அடைவதற்காக, நாம் ஜோஸஃபைக் கொன்று விடுவோம், அல்லது ஊரை விட்டுத் துரத்தி விடுவோம். அதன்பிறகு, நீங்கள் நன்னெறியிலான மனிதர்களாகி விடலாம்.*”
[12:8] அவர்கள் கூறினர், “ஜோஸஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்குச் செல்லமான வர்களாக உள்ளனர், மேலும் நாமோ பெரும்பான்மையினராக இருக்கின்றோம். உண்மையில், நம் தந்தை வெகுதூரம் வழிகேட்டில் இருக்கின்றார்.
[12:10] அவர்களில் ஒருவர், “ஜோஸஃபைக் கொன்று விடாதீர்கள்; நாம் அவரை ஒரு கிணற்றின் ஆழத்தில் எறிந்து விடுவோம். இவ்வாறு செய்ய நீங்கள் முடிவெடுத்தால், ஒருவேளை ஏதேனும் பிரயாணிகளின் கூட்டம் அவரை எடுத்துக் கொண்டு போய்விடக்கூடும்” என்று கூறினார்.