Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:1 — இடியோசை

அ.ல.ம.ர.* (எழுத்துக்களான) இவை இந்த வேதத்தின் சான்றுகளாகும். உமது இரட்சகரிட மிருந்து உமக்கு என்ன இறக்கப்பட்டுள்ளதோ அதுவே சத்தியமாகும், ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

[13:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[13:2] கடவுள் தான் நீங்கள் காணக்கூடிய வானங் களை தூண்கள் எதுவுமின்றி உயர்த்தியவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். சூரியன் மற்றும் சந்திரன் ஒவ்வொன்றையும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதொரு காலத்திற்கு (அவற்றின் வட்ட வரைக்குள்) ஓடும்படி அவர் ஆக்கினார். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்து கின்றார், மேலும் உங்கள் இரட்சகரைச் சந்திப்பது குறித்து நீங்கள் உறுதிப்பாட்டை அடையும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை விவரிக்கின்றார்.