Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:2 — இடியோசை

கடவுள் தான் நீங்கள் காணக்கூடிய வானங் களை தூண்கள் எதுவுமின்றி உயர்த்தியவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். சூரியன் மற்றும் சந்திரன் ஒவ்வொன்றையும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதொரு காலத்திற்கு (அவற்றின் வட்ட வரைக்குள்) ஓடும்படி அவர் ஆக்கினார். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்து கின்றார், மேலும் உங்கள் இரட்சகரைச் சந்திப்பது குறித்து நீங்கள் உறுதிப்பாட்டை அடையும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை விவரிக்கின்றார்.

[13:1] அ.ல.ம.ர.* (எழுத்துக்களான) இவை இந்த வேதத்தின் சான்றுகளாகும். உமது இரட்சகரிட மிருந்து உமக்கு என்ன இறக்கப்பட்டுள்ளதோ அதுவே சத்தியமாகும், ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

[13:3] அவர்தான் பூமியை நிர்மாணித்து, மேலும் அதன் மேல் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவர். மேலும் வெவ்வேறுபட்ட கனி வர்க்கங்களிலிருந்து, அவர் அவற்றை ஜோடி களாக-ஆணினம் மற்றும் பெண்ணினம் என ஆக்கினார். இரவு பகலை முந்துகின்றது. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.