Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:3 — இடியோசை

وَهُوَ الَّذى مَدَّ الأَرضَ وَجَعَلَ فيها رَوٰسِىَ وَأَنهٰرًا ۖ وَمِن كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فيها زَوجَينِ اثنَينِ ۖ يُغشِى الَّيلَ النَّهارَ ۚ إِنَّ فى ذٰلِكَ لَءايٰتٍ لِقَومٍ يَتَفَكَّرونَ

அவர்தான் பூமியை நிர்மாணித்து, மேலும் அதன் மேல் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவர். மேலும் வெவ்வேறுபட்ட கனி வர்க்கங்களிலிருந்து, அவர் அவற்றை ஜோடி களாக-ஆணினம் மற்றும் பெண்ணினம் என ஆக்கினார். இரவு பகலை முந்துகின்றது. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.

[13:2] கடவுள் தான் நீங்கள் காணக்கூடிய வானங் களை தூண்கள் எதுவுமின்றி உயர்த்தியவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டார். சூரியன் மற்றும் சந்திரன் ஒவ்வொன்றையும், முன்னரே தீர்மானிக்கப் பட்டதொரு காலத்திற்கு (அவற்றின் வட்ட வரைக்குள்) ஓடும்படி அவர் ஆக்கினார். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்து கின்றார், மேலும் உங்கள் இரட்சகரைச் சந்திப்பது குறித்து நீங்கள் உறுதிப்பாட்டை அடையும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை விவரிக்கின்றார்.

[13:4] பூமியின் மீது திராட்சைப் பழத்தோட்டங் களையும், பயிர்களையும், பேரீத்த மரங்களை யும்-கொட்டைகள் கொண்டவை மற்றும் கொட்டைகள் இல்லாதவைகளை- விளைவிக்கும் நிலங்கள் அருகருகே உள்ளன. அவை ஒரே தண்ணீரைக் கொண்டு பாசனம் செய்யப்பட்ட போதிலும், உண்ணுவதற்கு அவற்றில் சிலவற்றை நாம் மற்றவைகளை விட மேலாக தேர்ந்தெடுத்திருக்கின்றோம். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.