Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:4 — இடியோசை

பூமியின் மீது திராட்சைப் பழத்தோட்டங் களையும், பயிர்களையும், பேரீத்த மரங்களை யும்-கொட்டைகள் கொண்டவை மற்றும் கொட்டைகள் இல்லாதவைகளை- விளைவிக்கும் நிலங்கள் அருகருகே உள்ளன. அவை ஒரே தண்ணீரைக் கொண்டு பாசனம் செய்யப்பட்ட போதிலும், உண்ணுவதற்கு அவற்றில் சிலவற்றை நாம் மற்றவைகளை விட மேலாக தேர்ந்தெடுத்திருக்கின்றோம். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.

[13:3] அவர்தான் பூமியை நிர்மாணித்து, மேலும் அதன் மேல் மலைகளையும் ஆறுகளையும் அமைத்தவர். மேலும் வெவ்வேறுபட்ட கனி வர்க்கங்களிலிருந்து, அவர் அவற்றை ஜோடி களாக-ஆணினம் மற்றும் பெண்ணினம் என ஆக்கினார். இரவு பகலை முந்துகின்றது. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.

[13:5] எதற்காகவாவது நீர் வியப்படைவீராயின், உண்மையான வியப்பு அவர்கள்: “நாம் தூசி யாக மாறிய பின்னர், நாம் புதிதாக மீண்டும் படைக்கப்படுவோமா?” என்று கூறுவதுதான். இவர்கள் தான் தங்கள் இரட்சகரை நம்ப மறுத்தவர்கள். இவர்கள் தான் தங்கள் கழுத்துக்களைச் சுற்றி விலங்குகளுக்கு உள்ளானவர்கள். இவர்கள்தான் நரகிற்கு உள்ளானவர்கள், அங்கே அவர்கள் நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.