Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:5 — இடியோசை

எதற்காகவாவது நீர் வியப்படைவீராயின், உண்மையான வியப்பு அவர்கள்: “நாம் தூசி யாக மாறிய பின்னர், நாம் புதிதாக மீண்டும் படைக்கப்படுவோமா?” என்று கூறுவதுதான். இவர்கள் தான் தங்கள் இரட்சகரை நம்ப மறுத்தவர்கள். இவர்கள் தான் தங்கள் கழுத்துக்களைச் சுற்றி விலங்குகளுக்கு உள்ளானவர்கள். இவர்கள்தான் நரகிற்கு உள்ளானவர்கள், அங்கே அவர்கள் நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.

[13:4] பூமியின் மீது திராட்சைப் பழத்தோட்டங் களையும், பயிர்களையும், பேரீத்த மரங்களை யும்-கொட்டைகள் கொண்டவை மற்றும் கொட்டைகள் இல்லாதவைகளை- விளைவிக்கும் நிலங்கள் அருகருகே உள்ளன. அவை ஒரே தண்ணீரைக் கொண்டு பாசனம் செய்யப்பட்ட போதிலும், உண்ணுவதற்கு அவற்றில் சிலவற்றை நாம் மற்றவைகளை விட மேலாக தேர்ந்தெடுத்திருக்கின்றோம். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இவை திடமான சான்றுகளாகும்.

[13:6] நன்னெறியாளர்களாக மாறிவிடுவதற்குப் பதிலாக, தங்கள் மீது அழிவைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடு கின்றனர்! கடந்த காலங்களில் போதுமான முன்னு தாரணங்கள் அவர்களுக்காக அமைக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில், உம்முடைய இரட்சகர் மனிதர்களுடைய வரம்பு மீறல்கள் இருந்த போதிலும், அவர்கள் பால் முற்றிலும் மன்னிப்பு கொண்டவராக உள்ளார், மேலும் உமது இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதிலும் கண்டிப்பானவர்.