குர்ஆன் 13:6 — இடியோசை
நன்னெறியாளர்களாக மாறிவிடுவதற்குப் பதிலாக, தங்கள் மீது அழிவைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடு கின்றனர்! கடந்த காலங்களில் போதுமான முன்னு தாரணங்கள் அவர்களுக்காக அமைக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில், உம்முடைய இரட்சகர் மனிதர்களுடைய வரம்பு மீறல்கள் இருந்த போதிலும், அவர்கள் பால் முற்றிலும் மன்னிப்பு கொண்டவராக உள்ளார், மேலும் உமது இரட்சகர் தண்டனையை நிறைவேற்றுவதிலும் கண்டிப்பானவர்.
[13:5] எதற்காகவாவது நீர் வியப்படைவீராயின், உண்மையான வியப்பு அவர்கள்: “நாம் தூசி யாக மாறிய பின்னர், நாம் புதிதாக மீண்டும் படைக்கப்படுவோமா?” என்று கூறுவதுதான். இவர்கள் தான் தங்கள் இரட்சகரை நம்ப மறுத்தவர்கள். இவர்கள் தான் தங்கள் கழுத்துக்களைச் சுற்றி விலங்குகளுக்கு உள்ளானவர்கள். இவர்கள்தான் நரகிற்கு உள்ளானவர்கள், அங்கே அவர்கள் நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.
[13:7] நம்ப மறுத்தோர், “அவருடைய இரட்சகரிட மிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வந்தால் (அப்போது நாங்கள் நம்பிகை கொள் வோம்)” என்று கூறுகின்றார்கள். நீர் ஒரு எச்சரிப்பவர் மட்டுமே-ஒவ்வொரு சமூகமும் வழிகாட்டும் ஓர் ஆசிரியரைப் பெற்றுக் கொள்கின்றது.