குர்ஆன் 13:11 — இடியோசை
لَهُ مُعَقِّبٰتٌ مِن بَينِ يَدَيهِ وَمِن خَلفِهِ يَحفَظونَهُ مِن أَمرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لا يُغَيِّرُ ما بِقَومٍ حَتّىٰ يُغَيِّروا ما بِأَنفُسِهِم ۗ وَإِذا أَرادَ اللَّهُ بِقَومٍ سوءًا فَلا مَرَدَّ لَهُ ۚ وَما لَهُم مِن دونِهِ مِن والٍ
உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கும் (வானவர்களின்) அணிகள், மாறி மாறி முறைகள் எடுத்துக் கொள்கின்றனர்-அவர் கள் உங்களுக்கு முன்புறமும் உங்களுக்குப் பின்புறமும் உள்ளனர். அவர்கள் உங்களுடன் இருக்கின்றனர், மேலும் கடவுள்-ன் கட்டளைகளுக்கிணங்க உங்களைப் பாதுகாக்கின்றனர். இவ்விதமாக, எந்தச் சமூகத்தின் நிலையையும் மாற்றிக்கொள்ளும் முடிவை அவர்களே செய்தால் அன்றி, கடவுள் மாற்றுவதில்லை. எந்தச் சமூகத்திற்கும் ஏதேனும் கஷ்டத்தைக் கடவுள் நாடிவிட்டால், எந்தச் சக்தியும் அதனைத் தடுத்து விட முடியாது. ஏனெனில் அவரை அன்றி அவர்களுக்கு இரட்சகராகவோ எஜமானராகவோ எவரும் இல்லை.
[13:10] உங்களுடைய எண்ணங்களை நீங்கள் மறைத்துக்கொண்டாலும், அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும், அல்லது இரவின் இருளில் மறைந்திருந்தாலும், அல்லது பகலின் வெளிச்சத்தில் செயல்பட்டாலும் அது ஒரே மாதிரியே ஆகும்.
[13:12] அவர்தான் அச்சத்திற்கும், அதே சமயம் எதிர்ப்பார்ப்பிற்கும் மூலாதாரமாக மின்னலை உங்களுக்குக் காட்டுபவர், மேலும் கனத்த மேகங்களையும் அவர் துவக்குகின்றார்.