Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:12 — இடியோசை

அவர்தான் அச்சத்திற்கும், அதே சமயம் எதிர்ப்பார்ப்பிற்கும் மூலாதாரமாக மின்னலை உங்களுக்குக் காட்டுபவர், மேலும் கனத்த மேகங்களையும் அவர் துவக்குகின்றார்.

[13:11] உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கும் (வானவர்களின்) அணிகள், மாறி மாறி முறைகள் எடுத்துக் கொள்கின்றனர்-அவர் கள் உங்களுக்கு முன்புறமும் உங்களுக்குப் பின்புறமும் உள்ளனர். அவர்கள் உங்களுடன் இருக்கின்றனர், மேலும் கடவுள்-ன் கட்டளைகளுக்கிணங்க உங்களைப் பாதுகாக்கின்றனர். இவ்விதமாக, எந்தச் சமூகத்தின் நிலையையும் மாற்றிக்கொள்ளும் முடிவை அவர்களே செய்தால் அன்றி, கடவுள் மாற்றுவதில்லை. எந்தச் சமூகத்திற்கும் ஏதேனும் கஷ்டத்தைக் கடவுள் நாடிவிட்டால், எந்தச் சக்தியும் அதனைத் தடுத்து விட முடியாது. ஏனெனில் அவரை அன்றி அவர்களுக்கு இரட்சகராகவோ எஜமானராகவோ எவரும் இல்லை.

[13:13] இடியோசை அவருடைய மகிமையைப் புகழ் கின்றது, மேலும் அவர் மீதுள்ள பயபக்தியால், வானவர்களும் அவ்வாறே செய்கின்றனர். அவருடைய நாட்டத்திற்கு ஏற்ப தாக்குகின்ற மின்னல் அம்புகளை அவர் அனுப்புகின்றார். இருப்பினும், அவருடைய சக்தி அச்சுறுத்தக் கூடியதாக இருந்த போதிலும் அவர்கள் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.