Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:14 — இடியோசை

அவரை இறைஞ்சிப் பிரார்த்திப்பது மட்டுமே முறையான பிரார்த்தனையாகும், அதே சமயம் அவரை அன்றி அவர்கள் இறைஞ்சும் இணைத் தெய்வங்கள், எப்போதும் பதிலளிக்க இயலாது. இவ்விதமாக, அவர்கள் தண்ணீரை நோக்கித் தங்கள் கைகளை நீட்டிக் கொள்பவர்களைப் போன்றவர்கள், ஆனால் அவர்களுடைய வாய்களை எதுவும் அடைவதில்லை. நம்ப மறுப்பவர்களின் பிரார்த்தனைகள் வீணாகிப் போனவையே ஆகும்.

[13:13] இடியோசை அவருடைய மகிமையைப் புகழ் கின்றது, மேலும் அவர் மீதுள்ள பயபக்தியால், வானவர்களும் அவ்வாறே செய்கின்றனர். அவருடைய நாட்டத்திற்கு ஏற்ப தாக்குகின்ற மின்னல் அம்புகளை அவர் அனுப்புகின்றார். இருப்பினும், அவருடைய சக்தி அச்சுறுத்தக் கூடியதாக இருந்த போதிலும் அவர்கள் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.

[13:15] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், விரும்பியோ அல்லது விரும் பாமலோ கடவுள்-க்குச் சிரம் பணிகின்றன, மேலும் அவர்களுடைய நிழல்களும், காலை களிலும், மாலைகளிலும் அவ்வாறே செய் கின்றன.*