Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:15 — இடியோசை

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், விரும்பியோ அல்லது விரும் பாமலோ கடவுள்-க்குச் சிரம் பணிகின்றன, மேலும் அவர்களுடைய நிழல்களும், காலை களிலும், மாலைகளிலும் அவ்வாறே செய் கின்றன.*

[13:14] அவரை இறைஞ்சிப் பிரார்த்திப்பது மட்டுமே முறையான பிரார்த்தனையாகும், அதே சமயம் அவரை அன்றி அவர்கள் இறைஞ்சும் இணைத் தெய்வங்கள், எப்போதும் பதிலளிக்க இயலாது. இவ்விதமாக, அவர்கள் தண்ணீரை நோக்கித் தங்கள் கைகளை நீட்டிக் கொள்பவர்களைப் போன்றவர்கள், ஆனால் அவர்களுடைய வாய்களை எதுவும் அடைவதில்லை. நம்ப மறுப்பவர்களின் பிரார்த்தனைகள் வீணாகிப் போனவையே ஆகும்.

[13:16] “வானங்கள் மற்றும் பூமிக்கு இரட்சகராக இருப்பது யார்?” என்று கூறுவீராக, “கடவுள்” என்று கூறுவீராக, “பின்னர் ஏன் நீங்கள் அவரைத் தவிர தங்களுக்கே நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ளச் சக்தியற்ற வர்களை எஜமானர்களாக அமைத்துக் கொள் கின்றீர்கள்?” என்று கூறுவீராக. “குருடரும் பார்வையுடையவரும் சமமாவார்களா? இருளும் ஒளியும் சமமாகுமா?” என்று கூறுவீராக. கடவுள்-உடன் அவருடைய படைப்புகளுக்கு ஒப்பான படைப்புக்களை, அந்த இரு படைப்புகளுக்கும் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு, படைத்திருக்கும் இணைத் தெய்வங்களை அவர்கள் கண்டு விட்டனரா? “கடவுள் தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர் ஒருவர்தான், மேலான அதிகாரம் கொண்டவர்” என்று கூறுவீராக.