Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:16 — இடியோசை

“வானங்கள் மற்றும் பூமிக்கு இரட்சகராக இருப்பது யார்?” என்று கூறுவீராக, “கடவுள்” என்று கூறுவீராக, “பின்னர் ஏன் நீங்கள் அவரைத் தவிர தங்களுக்கே நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ளச் சக்தியற்ற வர்களை எஜமானர்களாக அமைத்துக் கொள் கின்றீர்கள்?” என்று கூறுவீராக. “குருடரும் பார்வையுடையவரும் சமமாவார்களா? இருளும் ஒளியும் சமமாகுமா?” என்று கூறுவீராக. கடவுள்-உடன் அவருடைய படைப்புகளுக்கு ஒப்பான படைப்புக்களை, அந்த இரு படைப்புகளுக்கும் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு, படைத்திருக்கும் இணைத் தெய்வங்களை அவர்கள் கண்டு விட்டனரா? “கடவுள் தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர் ஒருவர்தான், மேலான அதிகாரம் கொண்டவர்” என்று கூறுவீராக.

[13:15] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், விரும்பியோ அல்லது விரும் பாமலோ கடவுள்-க்குச் சிரம் பணிகின்றன, மேலும் அவர்களுடைய நிழல்களும், காலை களிலும், மாலைகளிலும் அவ்வாறே செய் கின்றன.*

[13:17] அவர் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்பு கின்றார், அதன்மூலம் பள்ளத்தாக்குகள் நிரம்பி வழிகின்றன, பின்னர் அந்த நீர்வீழ்ச்சி அபரிமிதமான நுரையை உருவாக்குகின்றது. அதுபோலவே, அவர்களுடைய ஆபரணங் களுக்காகவோ அல்லது சாதனங்களுக் காகவோ உலோகங்களைச் சுத்தம் செய்ய அவர்கள் நெருப்பைப் பயன்படுத்தும் போதும், நுரை உருவாகின்றது. கடவுள் இவ்விதமாக சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமானங் களை எடுத்துரைக்கின்றார். அந்த நுரையைப் பொறுத்தவரை, அது வீணாகிப் போகின்றது, அதே சமயம் மனிதர்களுக்குப் பயன் தருவதோ மண்ணிற்கு நெருக்கமாகத் தங்கி விடுகின்றது. கடவுள் இவ்விதமாக உவமானங்களை எடுத்துரைக்கின்றார்.