குர்ஆன் 13:21 — இடியோசை
சேர்த்து வைக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதை அவர்கள் சேர்த்து வைக்கின்றார்கள், தங்கள் இரட்சகரிடம் பயபக்தியுடன் இருக்கின்றார்கள், மேலும் அச்சுறுத்தும் கேள்விக்கணக்கை அஞ்சு கின்றார்கள்.
[13:20] அவர்கள் கடவுள்-இடம் செய்த தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுபவர்கள், மேலும் உடன்படிக்கைகளை மீறாதவர்கள்.
[13:22] அவர்கள் தங்கள் இரட்சகரைத் தேடுவதில் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்கின்றார்கள், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கின்றார்கள், நம் வாழ்வாதாரங்களில் அவர்களுக்குரியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்கள், மேலும் நல்லதைக் கொண்டு கெட்டதை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் மிகச்சிறந்த தங்குமிடத்திற்குத் தகுதி பெற்று விட்டார்கள்.