குர்ஆன் 13:22 — இடியோசை
அவர்கள் தங்கள் இரட்சகரைத் தேடுவதில் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்கின்றார்கள், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கின்றார்கள், நம் வாழ்வாதாரங்களில் அவர்களுக்குரியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்கள், மேலும் நல்லதைக் கொண்டு கெட்டதை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் மிகச்சிறந்த தங்குமிடத்திற்குத் தகுதி பெற்று விட்டார்கள்.
[13:21] சேர்த்து வைக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதை அவர்கள் சேர்த்து வைக்கின்றார்கள், தங்கள் இரட்சகரிடம் பயபக்தியுடன் இருக்கின்றார்கள், மேலும் அச்சுறுத்தும் கேள்விக்கணக்கை அஞ்சு கின்றார்கள்.
[13:23] தங்கள் பெற்றோர்களிலும், தங்கள் துணை களிலும், மற்றும் தங்கள் பிள்ளைகளிலும் உள்ள நன்னெறியாளர்களுடன் சேர்ந்து அவர்கள் ஏதேன் தோட்டங்களில் நுழைவார்கள். ஒவ்வொரு வாயிலின் வழியாகவும் வானவர்கள் அவர்களிடம் வருவார்கள்.