Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:23 — இடியோசை

தங்கள் பெற்றோர்களிலும், தங்கள் துணை களிலும், மற்றும் தங்கள் பிள்ளைகளிலும் உள்ள நன்னெறியாளர்களுடன் சேர்ந்து அவர்கள் ஏதேன் தோட்டங்களில் நுழைவார்கள். ஒவ்வொரு வாயிலின் வழியாகவும் வானவர்கள் அவர்களிடம் வருவார்கள்.

[13:22] அவர்கள் தங்கள் இரட்சகரைத் தேடுவதில் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்கின்றார்கள், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கின்றார்கள், நம் வாழ்வாதாரங்களில் அவர்களுக்குரியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்கள், மேலும் நல்லதைக் கொண்டு கெட்டதை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் மிகச்சிறந்த தங்குமிடத்திற்குத் தகுதி பெற்று விட்டார்கள்.

[13:24] “நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருந்த காரணத்தால், உங்கள் மீது அமைதி நிலவுவதாக. எத்தகையதொரு ஆனந்தமான விதி.”