குர்ஆன் 13:24 — இடியோசை
“நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருந்த காரணத்தால், உங்கள் மீது அமைதி நிலவுவதாக. எத்தகையதொரு ஆனந்தமான விதி.”
[13:23] தங்கள் பெற்றோர்களிலும், தங்கள் துணை களிலும், மற்றும் தங்கள் பிள்ளைகளிலும் உள்ள நன்னெறியாளர்களுடன் சேர்ந்து அவர்கள் ஏதேன் தோட்டங்களில் நுழைவார்கள். ஒவ்வொரு வாயிலின் வழியாகவும் வானவர்கள் அவர்களிடம் வருவார்கள்.
[13:25] கடவுள்-ன் உடன்படிக்கையைக் காப்பதாக வாக்குறுதி செய்து விட்டுப் பின்னர் அதனை மீறுபவர்கள், மேலும் கடவுள் சேர்த்து வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டவற்றைத் துண்டிப்பவர்கள், மேலும் தீமையைச் செய் பவர்கள், அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டித்தலுக்கு உள்ளாகி விட்டார்கள்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகிவிட்டார்கள்.