குர்ஆன் 13:29 — இடியோசை
நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோர் மகிழ்ச்சிக்கும் மேலும் ஆனந்தமானதோர் விதிக்கும் தகுதியாகி விட்டனர்.
[13:28] அவர்கள் கடவுள்-ஐ நினைவு கூர்வதில் ஆனந்தம் அடைகின்ற இதயங்கள் கொண்டவர்கள். நிச்சயமாக, கடவுள்-ஐ நினைவு கூர்வதன் மூலமே, இதயங்கள் ஆனந்தமடைகின்றன.
[13:30] (ரஷாதே)* கடந்தகாலத்தில் மற்றச் சமூகங் களுக்கு நாம் செய்ததைப் போலவே, இந்தச் சமூகத்திற்கு உம்மை நாம் அனுப்பி உள்ளோம். நாம் உமக்கு வெளிப்படுத்துபவற்றை நீர் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும், ஏனெ னில் அவர்கள் மிக்க அருளாளரை நம்ப மறுத்து விட்டனர். “அவரே என் இரட்சகர். அவரைத் தவிர தெய்வம் இல்லை. நான் அவரிடம் மட்டுமே என் பொறுப்பை ஒப்படைக்கின்றேன்; என் இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று கூறுவீராக.