குர்ஆன் 13:31 — இடியோசை
ஒரு குர்ஆன் கொண்டு மலைகளை நகரச் செய்தாலும், அல்லது பூமியைத் துண்டுகளாகப் பிளந்தாலும், அல்லது இறந்தவர்களைப் பேசச் செய்தாலும் (அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்). கடவுள் அனைத்து விஷயங் களையும் கட்டுப்படுத்துகின்றார். கடவுள் நாடியிருந்தால் எல்லா மக்களையும் அவர் நேர்வழியில் நடத்தியிருக்க இயலும் என்பதை உணர்ந்து நம்பிக்கையாளர்கள் விலகிக் கொண்டு விட வேண்டிய நேரம் இதுவல்லவா? நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், அவர் களுடைய சொந்தச் செயல்களின் விளை வாகக் கடவுள்-ன் வாக்குறுதி நிறைவேறும் வரை, தொடர்ந்து பேரழிவுகளை அனுபவிப்பார் கள், அல்லது அவர்களுக்கு அருகில் பேரழிவு கள் தாக்கக் காண்பார்கள். முன்னரே தீர்மானி க்கப்பட்ட விதியைக் கடவுள் ஒருபோதும் மாற்றுவதில்லை.
[13:30] (ரஷாதே)* கடந்தகாலத்தில் மற்றச் சமூகங் களுக்கு நாம் செய்ததைப் போலவே, இந்தச் சமூகத்திற்கு உம்மை நாம் அனுப்பி உள்ளோம். நாம் உமக்கு வெளிப்படுத்துபவற்றை நீர் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும், ஏனெ னில் அவர்கள் மிக்க அருளாளரை நம்ப மறுத்து விட்டனர். “அவரே என் இரட்சகர். அவரைத் தவிர தெய்வம் இல்லை. நான் அவரிடம் மட்டுமே என் பொறுப்பை ஒப்படைக்கின்றேன்; என் இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று கூறுவீராக.
[13:32] உமக்கு முன்னிருந்த தூதர்களும் கேலி செய்யப்பட்டனர்; நம்ப மறுத்தவர்களை நான் இதைச் செய்ய அனுமதித்தேன், பின்னர் அவர் களை நான் தண்டித்தேன். என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!