Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:32 — இடியோசை

உமக்கு முன்னிருந்த தூதர்களும் கேலி செய்யப்பட்டனர்; நம்ப மறுத்தவர்களை நான் இதைச் செய்ய அனுமதித்தேன், பின்னர் அவர் களை நான் தண்டித்தேன். என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!

[13:31] ஒரு குர்ஆன் கொண்டு மலைகளை நகரச் செய்தாலும், அல்லது பூமியைத் துண்டுகளாகப் பிளந்தாலும், அல்லது இறந்தவர்களைப் பேசச் செய்தாலும் (அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்). கடவுள் அனைத்து விஷயங் களையும் கட்டுப்படுத்துகின்றார். கடவுள் நாடியிருந்தால் எல்லா மக்களையும் அவர் நேர்வழியில் நடத்தியிருக்க இயலும் என்பதை உணர்ந்து நம்பிக்கையாளர்கள் விலகிக் கொண்டு விட வேண்டிய நேரம் இதுவல்லவா? நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், அவர் களுடைய சொந்தச் செயல்களின் விளை வாகக் கடவுள்-ன் வாக்குறுதி நிறைவேறும் வரை, தொடர்ந்து பேரழிவுகளை அனுபவிப்பார் கள், அல்லது அவர்களுக்கு அருகில் பேரழிவு கள் தாக்கக் காண்பார்கள். முன்னரே தீர்மானி க்கப்பட்ட விதியைக் கடவுள் ஒருபோதும் மாற்றுவதில்லை.

[13:33] ஒவ்வொரு தனி ஆன்மாவையும் கட்டுப் படுத்தும் அந்த ஒருவருக்கு நிகராக எவரேனும் உள்ளாரா? ஆயினும், அவர்கள் கடவுள்-க்குப் போட்டியாக இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். “அவற்றின் பெயர்களைக் கூறுங்கள். பூமியின் மீது அவர் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் தெரியப்படுத்துகின்றீர்களா? அல்லது வெற்று வாசகங்களை இட்டுக்கட்டுகின்றீர்களா?” என்று கூறுவீராக. உண்மையில், நம்ப மறுப்பவர் களின் சூழ்ச்சிகள் அவர்களுடைய கண் களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக அவர்கள் நேரான பாதையிலிருந்து திருப்பப் பட்டு விடுகின்றனர். கடவுள்-ஆல் வழி கேட்டிற்கு அனுப்பப்பட்டவர்களால் வழிகாட்டும் ஓர் ஆசிரியரை ஒருபோதும் காணமுடியாது.