Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:33 — இடியோசை

ஒவ்வொரு தனி ஆன்மாவையும் கட்டுப் படுத்தும் அந்த ஒருவருக்கு நிகராக எவரேனும் உள்ளாரா? ஆயினும், அவர்கள் கடவுள்-க்குப் போட்டியாக இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். “அவற்றின் பெயர்களைக் கூறுங்கள். பூமியின் மீது அவர் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் தெரியப்படுத்துகின்றீர்களா? அல்லது வெற்று வாசகங்களை இட்டுக்கட்டுகின்றீர்களா?” என்று கூறுவீராக. உண்மையில், நம்ப மறுப்பவர் களின் சூழ்ச்சிகள் அவர்களுடைய கண் களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக அவர்கள் நேரான பாதையிலிருந்து திருப்பப் பட்டு விடுகின்றனர். கடவுள்-ஆல் வழி கேட்டிற்கு அனுப்பப்பட்டவர்களால் வழிகாட்டும் ஓர் ஆசிரியரை ஒருபோதும் காணமுடியாது.

[13:32] உமக்கு முன்னிருந்த தூதர்களும் கேலி செய்யப்பட்டனர்; நம்ப மறுத்தவர்களை நான் இதைச் செய்ய அனுமதித்தேன், பின்னர் அவர் களை நான் தண்டித்தேன். என் தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!

[13:34] இந்த வாழ்வில் அவர்கள் தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர், மேலும் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாகும். கடவுள்-க்கு எதிராக எந்த ஒன்றும் அவர் களைக் காப்பாற்றி விட முடியாது.