Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:34 — இடியோசை

لَهُم عَذابٌ فِى الحَيوٰةِ الدُّنيا ۖ وَلَعَذابُ الءاخِرَةِ أَشَقُّ ۖ وَما لَهُم مِنَ اللَّهِ مِن واقٍ

இந்த வாழ்வில் அவர்கள் தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர், மேலும் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாகும். கடவுள்-க்கு எதிராக எந்த ஒன்றும் அவர் களைக் காப்பாற்றி விட முடியாது.

[13:33] ஒவ்வொரு தனி ஆன்மாவையும் கட்டுப் படுத்தும் அந்த ஒருவருக்கு நிகராக எவரேனும் உள்ளாரா? ஆயினும், அவர்கள் கடவுள்-க்குப் போட்டியாக இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றனர். “அவற்றின் பெயர்களைக் கூறுங்கள். பூமியின் மீது அவர் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் தெரியப்படுத்துகின்றீர்களா? அல்லது வெற்று வாசகங்களை இட்டுக்கட்டுகின்றீர்களா?” என்று கூறுவீராக. உண்மையில், நம்ப மறுப்பவர் களின் சூழ்ச்சிகள் அவர்களுடைய கண் களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக அவர்கள் நேரான பாதையிலிருந்து திருப்பப் பட்டு விடுகின்றனர். கடவுள்-ஆல் வழி கேட்டிற்கு அனுப்பப்பட்டவர்களால் வழிகாட்டும் ஓர் ஆசிரியரை ஒருபோதும் காணமுடியாது.

[13:35] நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும், சுவனத்தின் உருவகமாவது, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகள், தீர்ந்து போகாத வாழ்வாதாரங்கள், மற்றும் குளிர்ந்த நிழல். நன்னெறியைக் கடைப்பிடிப்போருக்கு உரிய விதி இத்தகையதேயாகும், அதே சமயம் நம்ப மறுப்போருக்குரிய விதியோ நரகமாகும்.