Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:35 — இடியோசை

நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும், சுவனத்தின் உருவகமாவது, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகள், தீர்ந்து போகாத வாழ்வாதாரங்கள், மற்றும் குளிர்ந்த நிழல். நன்னெறியைக் கடைப்பிடிப்போருக்கு உரிய விதி இத்தகையதேயாகும், அதே சமயம் நம்ப மறுப்போருக்குரிய விதியோ நரகமாகும்.

[13:34] இந்த வாழ்வில் அவர்கள் தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர், மேலும் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாகும். கடவுள்-க்கு எதிராக எந்த ஒன்றும் அவர் களைக் காப்பாற்றி விட முடியாது.

[13:36] வேதத்தைப் பெற்றவர்கள் உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றில் ஆனந்தம்அடைகின்றனர்; மற்ற சிலர் இதன் பகுதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடும். “நான் கடவுள்-ஐ வழிபட வேண்டும் என்றும், மேலும் அவருடன் இணைத் தெய்வங்கள் எதனையும் கூடச்சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன், அவ்வளவுதான், மேலும் என் இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று கூறுவீராக.