குர்ஆன் 13:36 — இடியோசை
வேதத்தைப் பெற்றவர்கள் உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றில் ஆனந்தம்அடைகின்றனர்; மற்ற சிலர் இதன் பகுதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடும். “நான் கடவுள்-ஐ வழிபட வேண்டும் என்றும், மேலும் அவருடன் இணைத் தெய்வங்கள் எதனையும் கூடச்சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன், அவ்வளவுதான், மேலும் என் இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று கூறுவீராக.
[13:35] நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப் பட்டிருக்கும், சுவனத்தின் உருவகமாவது, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகள், தீர்ந்து போகாத வாழ்வாதாரங்கள், மற்றும் குளிர்ந்த நிழல். நன்னெறியைக் கடைப்பிடிப்போருக்கு உரிய விதி இத்தகையதேயாகும், அதே சமயம் நம்ப மறுப்போருக்குரிய விதியோ நரகமாகும்.
[13:37] இந்தச் சட்டங்களை நாம் அரபி மொழியில் வெளிப்படுத்தியுள்ளோம், மேலும் இந்த அறிவு உமக்கு வந்து விட்ட பின்னர், அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் எப்போதாவது உடன்படு வீராயின், கடவுள்-க்கெதிராக, உமக்கு நண்பரோ, அல்லது பாதுகாவலரோ இருக்க மாட்டார்.