குர்ஆன் 13:37 — இடியோசை
இந்தச் சட்டங்களை நாம் அரபி மொழியில் வெளிப்படுத்தியுள்ளோம், மேலும் இந்த அறிவு உமக்கு வந்து விட்ட பின்னர், அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் எப்போதாவது உடன்படு வீராயின், கடவுள்-க்கெதிராக, உமக்கு நண்பரோ, அல்லது பாதுகாவலரோ இருக்க மாட்டார்.
[13:36] வேதத்தைப் பெற்றவர்கள் உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றில் ஆனந்தம்அடைகின்றனர்; மற்ற சிலர் இதன் பகுதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடும். “நான் கடவுள்-ஐ வழிபட வேண்டும் என்றும், மேலும் அவருடன் இணைத் தெய்வங்கள் எதனையும் கூடச்சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன், அவ்வளவுதான், மேலும் என் இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று கூறுவீராக.
[13:38] (ரஷாதே), உமக்கு முன்னரும் நாம் தூதர்களை அனுப்பி இருக்கின்றோம், மேலும் மனைவி யரும் பிள்ளைகளும் கொண்ட கணவர்களாக அவர்களை ஆக்கினோம். கடவுள்-ன் அங்கீ காரம் இன்றியும், மேலும் குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு நேரத்திற்கு ஏற்பவே அன்றியும் எந்தத் தூதரும் ஓர் அற்புதத்தைக் கொண்டு வர இயலாது.