குர்ஆன் 13:40 — இடியோசை
அவர்களுக்கு நாம் வாக்களிப்பதை உமக்கு நாம் காட்டினாலும் சரி, அல்லது அதற்கு முன்னர் உம் வாழ்வை முடித்து விட்டாலும் சரி, உமது ஒரே பணி (தூதுச் செய்தியை) ஒப்படைப்பது மட்டுமே. அவர்களைக் கணக்குக் கேட்க அழைக்கப் போவது நாம் தான்.
[13:39] தான் நாடுகின்ற எதையும் கடவுள் துடைத்து எடுத்து விடுகின்றார், மேலும் நிலைப்படுத்து கின்றார். அசலான மூலப்பிரதி அவரிடமே உள்ளது.
[13:41] பூமியின் மீது ஒவ்வொரு நாளும், அவர்களை முடிவை நோக்கி நெருக்கிக் கொண்டு வருவதையும், மேலும் மாற்றிவிட முடியாதபடி அவர்களுடைய வாழ்க்கைத் தவணையைக் கடவுள் தீர்மானிக்கின்றார் என்பதையும், அவர்கள் காணவில்லையா? அவர்தான் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவர்.