குர்ஆன் 13:39 — இடியோசை
தான் நாடுகின்ற எதையும் கடவுள் துடைத்து எடுத்து விடுகின்றார், மேலும் நிலைப்படுத்து கின்றார். அசலான மூலப்பிரதி அவரிடமே உள்ளது.
[13:38] (ரஷாதே), உமக்கு முன்னரும் நாம் தூதர்களை அனுப்பி இருக்கின்றோம், மேலும் மனைவி யரும் பிள்ளைகளும் கொண்ட கணவர்களாக அவர்களை ஆக்கினோம். கடவுள்-ன் அங்கீ காரம் இன்றியும், மேலும் குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு நேரத்திற்கு ஏற்பவே அன்றியும் எந்தத் தூதரும் ஓர் அற்புதத்தைக் கொண்டு வர இயலாது.
[13:40] அவர்களுக்கு நாம் வாக்களிப்பதை உமக்கு நாம் காட்டினாலும் சரி, அல்லது அதற்கு முன்னர் உம் வாழ்வை முடித்து விட்டாலும் சரி, உமது ஒரே பணி (தூதுச் செய்தியை) ஒப்படைப்பது மட்டுமே. அவர்களைக் கணக்குக் கேட்க அழைக்கப் போவது நாம் தான்.