Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:10 — ஆப்ரஹாம்

அவர்களுடைய தூதர்கள், “வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவரான; கடவுள்-ஐப்பற்றியா நீங்கள் சந்தேகங்கள் கொள்கின்றீர்கள்? உங்கள் பாவங்களை மன்னிப்பதற்காகவும், மேலும் உங்களை மீட்டுக் கொள்வதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அளிப்பதற்காகவும் மட்டுமே அவர் உங்களை அழைக்கின்றார்,” என்று கூறினார்கள். அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் வழிபட்டு வந்த வழிமுறையை விட்டும் எங்களைத் தடுக்க விரும்பும் நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை. ஆழ்ந்த அதிகாரம் எதையேனும் எங்களுக்குக் காட்டு வீராக” என்று கூறினார்கள்.

[14:9] உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா-நோவாவின் சமூகத்தார், ‘ஆது, தமூது’ மேலும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் இன்னும் கடவுள்-க்கு மட்டுமே அறிந்திருப்பவர்கள்? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் அவர்களை அவமரியாதையாக நடத்தினர், மேலும், “எதனைக் கொண்டு நீங்கள் அனுப்பப் பட்டுள்ளீர்களோ அதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம். உமது தூதுச் செய்தி குறித்து நாங்கள் சந்தே கத்தில் உள்ளோம்; முற்றிலும் ஐயப்பாடுடைய வர்களாக உள்ளோம்” என்று கூறினார்கள்.

[14:11] அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் கூறினார்கள், “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகமாக எதுவு மில்லை, ஆனால் தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோருக்கு கடவுள் அருள் பாலிக் கின்றார். கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, எந்த விதமான அதிகாரப்பூர்வமானதையும் எங்களால் காட்ட இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.