குர்ஆன் 14:11 — ஆப்ரஹாம்
அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் கூறினார்கள், “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகமாக எதுவு மில்லை, ஆனால் தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோருக்கு கடவுள் அருள் பாலிக் கின்றார். கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, எந்த விதமான அதிகாரப்பூர்வமானதையும் எங்களால் காட்ட இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[14:10] அவர்களுடைய தூதர்கள், “வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவரான; கடவுள்-ஐப்பற்றியா நீங்கள் சந்தேகங்கள் கொள்கின்றீர்கள்? உங்கள் பாவங்களை மன்னிப்பதற்காகவும், மேலும் உங்களை மீட்டுக் கொள்வதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அளிப்பதற்காகவும் மட்டுமே அவர் உங்களை அழைக்கின்றார்,” என்று கூறினார்கள். அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் வழிபட்டு வந்த வழிமுறையை விட்டும் எங்களைத் தடுக்க விரும்பும் நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை. ஆழ்ந்த அதிகாரம் எதையேனும் எங்களுக்குக் காட்டு வீராக” என்று கூறினார்கள்.
[14:12] “எங்களுடைய பாதைகளில் அவர் எங்களை வழிநடத்தியிருக்கையில், கடவுள் மீது நாங்கள் ஏன் பொறுப்பேற்படுத்தாமல் இருக்க வேண்டும்? உங்கள் அடக்குமுறைகளுக்கெதிராக நாங்கள் உறுதியோடு விடாமுயற்சியுடன் இருப்போம். பொறுப்பேற்படுத்துபவர்கள் அனைவரும் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.”