குர்ஆன் 14:12 — ஆப்ரஹாம்
“எங்களுடைய பாதைகளில் அவர் எங்களை வழிநடத்தியிருக்கையில், கடவுள் மீது நாங்கள் ஏன் பொறுப்பேற்படுத்தாமல் இருக்க வேண்டும்? உங்கள் அடக்குமுறைகளுக்கெதிராக நாங்கள் உறுதியோடு விடாமுயற்சியுடன் இருப்போம். பொறுப்பேற்படுத்துபவர்கள் அனைவரும் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.”
[14:11] அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் கூறினார்கள், “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் என்பதை விட அதிகமாக எதுவு மில்லை, ஆனால் தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுத்தோருக்கு கடவுள் அருள் பாலிக் கின்றார். கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, எந்த விதமான அதிகாரப்பூர்வமானதையும் எங்களால் காட்ட இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[14:13] நம்ப மறுத்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்பி வராவிட்டால், எங்கள் நாட்டை விட்டு உங்களை நாங்கள் விரட்டி விடுவோம்” என்று கூறினார்கள். அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு உள்ளுணர்வளித்தார்: “தவிர்த்து விட முடியாதவாறு, வரம்பு மீறுவோரை நாம் அழித்து விடுவோம்.