Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:13 — ஆப்ரஹாம்

நம்ப மறுத்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்பி வராவிட்டால், எங்கள் நாட்டை விட்டு உங்களை நாங்கள் விரட்டி விடுவோம்” என்று கூறினார்கள். அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு உள்ளுணர்வளித்தார்: “தவிர்த்து விட முடியாதவாறு, வரம்பு மீறுவோரை நாம் அழித்து விடுவோம்.

[14:12] “எங்களுடைய பாதைகளில் அவர் எங்களை வழிநடத்தியிருக்கையில், கடவுள் மீது நாங்கள் ஏன் பொறுப்பேற்படுத்தாமல் இருக்க வேண்டும்? உங்கள் அடக்குமுறைகளுக்கெதிராக நாங்கள் உறுதியோடு விடாமுயற்சியுடன் இருப்போம். பொறுப்பேற்படுத்துபவர்கள் அனைவரும் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.”

[14:14] “மேலும், அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய நாட்டில் உம்மை வசிக்கச் செய்வோம். மேலும் எனது மாட்சிமையில் பயபக்தியுடன் இருந்தவர்களுக்கும், மேலும் எனது வாக்குறுதியில் பயபக்தியுடன் இருந்தவர்களுக்கும், இதுவே (வெகுமதி) ஆகும்”.