குர்ஆன் 14:22 — ஆப்ரஹாம்
மேலும், தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட பின்னர் சாத்தான், “கடவுள் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தார், மேலும் நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன், ஆனால் நான் என் வாக்குறுதியை முறித்து விட்டேன். உங்கள் மீது நான் எந்த அதிகாரமும் கொண்டிருக்கவில்லை; நான் உங்களை அழைத்தேன், அவ்வளவுதான், நீங்கள் தான் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டீர்கள். ஆகையால், என்னைப் பழிக்காதீர்கள், மேலும் உங்களை மட்டுமே பழித்துக் கொள்ளுங்கள். என்னுடைய முறையீடுகள் உங்களுக்கு உதவி செய்ய இயலாது, அன்றியும் உங்களுடைய முறையீடுகள் எனக்கு உதவி செய்ய இயலாது. நீங்கள் என்னை இணைத்தெய்வமாக வழிபட்டதை நான் நிராகரித்து விட்டேன். வரம்பு மீறுபவர்கள் வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்” என்று கூறுவான்.
[14:21] அவர்கள் அனைவரும் கடவுள் முன் நிற்கும் போது*, பின்பற்றியவர்கள் தங்கள் தலைவர்களிடம், “நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். கடவுள்-ன் தண்டனையிலிருந்து எங்களை ஒரு சிறிதேனும் உங்களால் காக்க முடியுமா?” என்று கூறுவார்கள். அவர்கள், “கடவுள் எங்களுக்கு வழியைக் காட்டியிருந்தால், நாங்கள் உங்களுக்கு வழிகாட்டியிருப்போம். இப்போது மிகவும் தாமதமாகி விட்டது, நாம் கவலைப்பட்டாலும் அல்லது பொறுமையாக இருந்தாலும் சரியே, வெளியேறுவதற்கு நமக்கு வழியெதுவும் இல்லை” என்று கூறுவார்கள்.
[14:23] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். அவர்களுடைய இரட்சகரின் நாட்டத் திற்கு ஏற்ப, அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். அங்கே அவர்களுடைய வாழ்த்துக் களாவது: “அமைதி” என்பதாகும்.