Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:23 — ஆப்ரஹாம்

நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். அவர்களுடைய இரட்சகரின் நாட்டத் திற்கு ஏற்ப, அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். அங்கே அவர்களுடைய வாழ்த்துக் களாவது: “அமைதி” என்பதாகும்.

[14:22] மேலும், தீர்ப்பு வழங்கப்பட்டு விட்ட பின்னர் சாத்தான், “கடவுள் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தார், மேலும் நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன், ஆனால் நான் என் வாக்குறுதியை முறித்து விட்டேன். உங்கள் மீது நான் எந்த அதிகாரமும் கொண்டிருக்கவில்லை; நான் உங்களை அழைத்தேன், அவ்வளவுதான், நீங்கள் தான் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டீர்கள். ஆகையால், என்னைப் பழிக்காதீர்கள், மேலும் உங்களை மட்டுமே பழித்துக் கொள்ளுங்கள். என்னுடைய முறையீடுகள் உங்களுக்கு உதவி செய்ய இயலாது, அன்றியும் உங்களுடைய முறையீடுகள் எனக்கு உதவி செய்ய இயலாது. நீங்கள் என்னை இணைத்தெய்வமாக வழிபட்டதை நான் நிராகரித்து விட்டேன். வரம்பு மீறுபவர்கள் வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்” என்று கூறுவான்.

[14:24] நல்ல வார்த்தைக்கு உதாரணமாக, உறுதியாகப் பதிந்திருக்கும் வேர்கள் கொண்ட மேலும் அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கும் ஒரு மரத்தை கடவுள் எடுத்துரைத்துள்ளார் என்பதை நீங்கள் காணவில்லையா?