குர்ஆன் 14:24 — ஆப்ரஹாம்
நல்ல வார்த்தைக்கு உதாரணமாக, உறுதியாகப் பதிந்திருக்கும் வேர்கள் கொண்ட மேலும் அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கும் ஒரு மரத்தை கடவுள் எடுத்துரைத்துள்ளார் என்பதை நீங்கள் காணவில்லையா?
[14:23] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். அவர்களுடைய இரட்சகரின் நாட்டத் திற்கு ஏற்ப, அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். அங்கே அவர்களுடைய வாழ்த்துக் களாவது: “அமைதி” என்பதாகும்.
[14:25] அதன் இரட்சகரால் திட்டமிட்டபடி, ஒவ்வொரு பருவத்திலும் அது அதன் விளைச்சலைத் தருகின்றது. கடவுள் இவ்விதமாக அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் பொருட்டு, உதாரணங்களை மனிதர்களுக்கு எடுத்துரைக் கின்றார்.