Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:32 — ஆப்ரஹாம்

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் கடவுள் ஒருவர் தான், மேலும் உங்களுடைய ஊட்டத்திற்காக அனைத்து கனிவர்க்கங் களையும் விளைவிப்பதற்காக விண்ணி லிருந்து அவர் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார். அவருடைய கட்டளைக்கு இணங்க கடல் மீது, உங்களுக்கு பணியாற்றுவதற்காக கப்பல்களை அவர் ஆக்கினார். ஆறுகளையும் கூட உங்களுக்கு பணியாற்றுவதற்காகவே அவர் ஆக்கினார்.

[14:31] வர்த்தகமோ, அன்றி உறவுமுறைச் சலுகைகளோ இல்லாத ஒரு நாள் வருவதற்கு முன்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து வருமாறும், மேலும் இரகசியமாகவும் மற்றும் பகிரங்கமாகவும், அவர்களுக்குரிய நம் வாழ் வாதாரங்களில் இருந்து (தர்மம்) கொடுத்து வருமாறும் நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம் உபதேசிப்பீராக.

[14:33] சூரியனையும் மற்றும் சந்திரனையும் தொடர்ந்து உங்களுடைய சேவைக்கென அவர் ஆக்கி னார். இரவையும் பகலையும் அவர் உங்களுக்கு பணியாற்றுவதற்காக ஆக்கினார்.