Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:33 — ஆப்ரஹாம்

சூரியனையும் மற்றும் சந்திரனையும் தொடர்ந்து உங்களுடைய சேவைக்கென அவர் ஆக்கி னார். இரவையும் பகலையும் அவர் உங்களுக்கு பணியாற்றுவதற்காக ஆக்கினார்.

[14:32] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் கடவுள் ஒருவர் தான், மேலும் உங்களுடைய ஊட்டத்திற்காக அனைத்து கனிவர்க்கங் களையும் விளைவிப்பதற்காக விண்ணி லிருந்து அவர் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார். அவருடைய கட்டளைக்கு இணங்க கடல் மீது, உங்களுக்கு பணியாற்றுவதற்காக கப்பல்களை அவர் ஆக்கினார். ஆறுகளையும் கூட உங்களுக்கு பணியாற்றுவதற்காகவே அவர் ஆக்கினார்.

[14:34] இன்னும் நீங்கள் அவரிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்ற எல்லா வகையான விஷயங் களையும் அவர் உங்களுக்குத் தருகின்றார். கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் எண்ணினால், உங்களால் ஒரு போதும் அவற்றை முழுமையாக எண்ணிவிட முடியாது. உண்மையில், மனித இனம் வரம்பு மீறுகின்றதாகவும், நன்றி கெட்டதாகவும் இருக்கின்றது.