குர்ஆன் 14:34 — ஆப்ரஹாம்
இன்னும் நீங்கள் அவரிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்ற எல்லா வகையான விஷயங் களையும் அவர் உங்களுக்குத் தருகின்றார். கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் எண்ணினால், உங்களால் ஒரு போதும் அவற்றை முழுமையாக எண்ணிவிட முடியாது. உண்மையில், மனித இனம் வரம்பு மீறுகின்றதாகவும், நன்றி கெட்டதாகவும் இருக்கின்றது.
[14:33] சூரியனையும் மற்றும் சந்திரனையும் தொடர்ந்து உங்களுடைய சேவைக்கென அவர் ஆக்கி னார். இரவையும் பகலையும் அவர் உங்களுக்கு பணியாற்றுவதற்காக ஆக்கினார்.
[14:35] ஆப்ரஹாம் கூறியதை நினைவு கூர்வீராக, “என் இரட்சகரே, இதனை அமைதியானதொரு நிலப்பரப்பாக ஆக்குவீராக, மேலும் என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுவ திலிருந்தும் காப்பீராக.