குர்ஆன் 14:35 — ஆப்ரஹாம்
ஆப்ரஹாம் கூறியதை நினைவு கூர்வீராக, “என் இரட்சகரே, இதனை அமைதியானதொரு நிலப்பரப்பாக ஆக்குவீராக, மேலும் என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுவ திலிருந்தும் காப்பீராக.
[14:34] இன்னும் நீங்கள் அவரிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்ற எல்லா வகையான விஷயங் களையும் அவர் உங்களுக்குத் தருகின்றார். கடவுள்-ன் அருட்கொடைகளை நீங்கள் எண்ணினால், உங்களால் ஒரு போதும் அவற்றை முழுமையாக எண்ணிவிட முடியாது. உண்மையில், மனித இனம் வரம்பு மீறுகின்றதாகவும், நன்றி கெட்டதாகவும் இருக்கின்றது.
[14:36] “என் இரட்சகரே, அவை ஏராளமான மனிதர் களை வழிதவறச் செய்து விட்டன. என்னைப் பின்பற்றுவோரைப் பொறுத்தவரை, அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். எனக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களைப் பொறுத்தவரை, நீர் மன்னிப் பவர், மிக்க கருணையாளர்.