குர்ஆன் 14:36 — ஆப்ரஹாம்
“என் இரட்சகரே, அவை ஏராளமான மனிதர் களை வழிதவறச் செய்து விட்டன. என்னைப் பின்பற்றுவோரைப் பொறுத்தவரை, அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். எனக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களைப் பொறுத்தவரை, நீர் மன்னிப் பவர், மிக்க கருணையாளர்.
[14:35] ஆப்ரஹாம் கூறியதை நினைவு கூர்வீராக, “என் இரட்சகரே, இதனை அமைதியானதொரு நிலப்பரப்பாக ஆக்குவீராக, மேலும் என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வழிபடுவ திலிருந்தும் காப்பீராக.
[14:37] “எங்கள் இரட்சகரே, நான், எனது குடும்பத்தின் ஒரு பகுதியை உமது புனித வீட்டின் அருகில், தாவரங்களற்ற இப்பள்ளத்தாக்கில் குடியேற்றி யிருக்கின்றேன். எங்கள் இரட்சகரே, அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) நிறை வேற்ற வேண்டியவர்களாக உள்ளனர், எனவே மனிதர்களைக் கூட்டமாக அவர்களோடு சந்திக்கச் செய்வீராக, மேலும் அவர்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கும் பொருட்டு, அனைத்துக் கனிவர்க்கங்களையும் அவர் களுக்கு வழங்குவீராக.