குர்ஆன் 14:38 — ஆப்ரஹாம்
“எங்கள் இரட்சகரே, நாங்கள் மறைத்து வைப் பவற்றையும் மேலும் நாங்கள் அறிவிப் பவற்றையும் நீர் அறிவீர்-பூமியின் மீதோ அன்றி வானங்களில் உள்ளவையோ, எந்த ஒன்றும் கடவுள்-க்கு மறைவானதல்ல.
[14:37] “எங்கள் இரட்சகரே, நான், எனது குடும்பத்தின் ஒரு பகுதியை உமது புனித வீட்டின் அருகில், தாவரங்களற்ற இப்பள்ளத்தாக்கில் குடியேற்றி யிருக்கின்றேன். எங்கள் இரட்சகரே, அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) நிறை வேற்ற வேண்டியவர்களாக உள்ளனர், எனவே மனிதர்களைக் கூட்டமாக அவர்களோடு சந்திக்கச் செய்வீராக, மேலும் அவர்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கும் பொருட்டு, அனைத்துக் கனிவர்க்கங்களையும் அவர் களுக்கு வழங்குவீராக.
[14:39] “என்னுடைய முதிர்ந்த வயதிலும், எனக்கு இஸ்மவேலையும், ஐசக்கையும் வழங்கியதற் காக, புகழ் அனைத்தும் கடவுள்-க்கு உரியது. என் இரட்சகர் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பவராக இருக்கின்றார்.