குர்ஆன் 14:5 — ஆப்ரஹாம்
இவ்வாறே, “உம்முடைய சமூகத்தாரை இருளில் இருந்து வெளியேற்றி ஒளியினுள்ளே வழி நடத்துவீராக, மேலும் கடவுள்-ன் நாட்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவீராக” எனக் கூறியவாறு, மோஸஸை நம்முடைய அற்புதங் களுடன் நாம் அனுப்பினோம். உறுதியோடும், நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இவை படிப்பினைகள் ஆகும்.
[14:4] விஷயங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு, (உபதேசம் செய்வதற்காக) அவருடைய சமூகத்தாரின் மொழியிலேயே அன்றி, எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை. பின்னர் தான் நாடுவோரைக் கடவுள் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் தான் நாடுவோரை வழிநடத்துகின்றார். அவர் சர்வ வல்லமையுடையவராகவும், ஞானம் மிக்கவராகவும் இருக்கின்றார்.
[14:6] மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகன்களைக் கொன்று உங்கள் மகள்களை உயிரோடு விட்டு வைத்து, உங்கள் மீது மோசமான அடக்குமுறையைச் சுமத்திய ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து அவர் உங்களைக் காப்பாற்றினார். அது உங்கள் இரட்சகரிடமிருந்து ஒரு கடினமான சோதனை யாக இருந்தது” என்று கூறியதை நினைவு கூர்வீராக.