குர்ஆன் 14:7 — ஆப்ரஹாம்
உமது இரட்சகர்: “நீங்கள் எனக்கு எவ்வளவுக் கெவ்வளவு நன்றி செலுத்துகின்றீர்களோ, நான் உங்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு தருவேன்” என்று கட்டளையிட்டுள்ளார். ஆனால் நீங்கள் நன்றியற்றவர்களாக மாறி விட்டால், பின்னர் எனது தண்டனை கடுமையானதாகும்.
[14:6] மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகன்களைக் கொன்று உங்கள் மகள்களை உயிரோடு விட்டு வைத்து, உங்கள் மீது மோசமான அடக்குமுறையைச் சுமத்திய ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து அவர் உங்களைக் காப்பாற்றினார். அது உங்கள் இரட்சகரிடமிருந்து ஒரு கடினமான சோதனை யாக இருந்தது” என்று கூறியதை நினைவு கூர்வீராக.
[14:8] மோஸஸ், “பூமியில் உள்ள அனைத்து மக்களு டனும் சேர்ந்து, நீங்கள் நம்ப மறுத்து விட்டாலும், கடவுள் தேவையற்றவர், புகழுக்குரியவர்” என்று கூறினார்.