குர்ஆன் 14:8 — ஆப்ரஹாம்
மோஸஸ், “பூமியில் உள்ள அனைத்து மக்களு டனும் சேர்ந்து, நீங்கள் நம்ப மறுத்து விட்டாலும், கடவுள் தேவையற்றவர், புகழுக்குரியவர்” என்று கூறினார்.
[14:7] உமது இரட்சகர்: “நீங்கள் எனக்கு எவ்வளவுக் கெவ்வளவு நன்றி செலுத்துகின்றீர்களோ, நான் உங்களுக்கு அவ்வளவுக்கவ்வளவு தருவேன்” என்று கட்டளையிட்டுள்ளார். ஆனால் நீங்கள் நன்றியற்றவர்களாக மாறி விட்டால், பின்னர் எனது தண்டனை கடுமையானதாகும்.
[14:9] உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்படவில்லையா-நோவாவின் சமூகத்தார், ‘ஆது, தமூது’ மேலும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் இன்னும் கடவுள்-க்கு மட்டுமே அறிந்திருப்பவர்கள்? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் அவர்களை அவமரியாதையாக நடத்தினர், மேலும், “எதனைக் கொண்டு நீங்கள் அனுப்பப் பட்டுள்ளீர்களோ அதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம். உமது தூதுச் செய்தி குறித்து நாங்கள் சந்தே கத்தில் உள்ளோம்; முற்றிலும் ஐயப்பாடுடைய வர்களாக உள்ளோம்” என்று கூறினார்கள்.